LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

கிராதகி என்பதன் அர்த்தம் என்ன?

From: 'சொல்லதிகாரன்'

அதிகாரன்

அதிகாரன்
அதிகாரன்

அதிகாரன்

Points : 830

Join date : 21/11/2012


FOUNDER

'கிராதகி' என்பது நேரடி தமிழ் சொல் இல்லை. ஆனால், 'கிராதர்' என்றால் குறவன்-(குறத்தி) என்று பொருள்.

கோபத்தில் பெண்களை திட்டும்போது இந்த 'கிராதகி' என்ற சொல்லை மக்கள் பயன்படுத்தினார்கள்.

'கிராதகி' என்றால் குறத்தி என்று அர்த்தம் கொள்ளலாம்.



"விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின், வேலைபோலும்
பெருந் தடந் தானையோடும், கிராதர்கோன் பெயர்துவந்தான்"


-இது கம்பராமாயண மீட்சி படலத்தில் வருவது

இங்கே "கிராதர் கோன்" என்று சொல்லபாடுபவன் குகன். இந்த இடத்தில் "கிராதர்" என்பது வேடன் என்ற பொருள். "கிராதர்கோன்" என்பது வேடர்களின் தலைவன்.

குறவர்களும் குறிஞ்சி நிலத்தில் வேடர்கள் தானே!

எனவே 'கிராதகி' என்றால் குறத்தி என்றும், 'கிராதகன்' என்றால் குறவன் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

-எழுத்ததிகாரன்.

(கம்பராமாயண மேற்கோள் உதவி - கே.பாலா.)
POSTED: Sun Dec 22, 2013 9:12 pmPOST 1

Message reputation : 100% (1 vote)

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum